அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த 2022ஆம் ஆண்டின் சிறந்த அரசு கட்டடத்திற்கான மாநில விருது 2022
Posted by Anna Centenary Library on 1:52 PM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 3.12.2022 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த 2022ஆம் ஆண்டின் சிறந்த அரசு கட்டடத்திற்கான மாநில விருது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விருதினை பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திருமதி செ.அமுதவள்ளி ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர். ஆனந்த குமார், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் திருமதி ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மற்றும் நல வாரியக் குழு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.